1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Token will be distributed to people from today

கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை… இன்று முதல் டோக்கன்!

ரூ.2000 2வது தவணை
கொரோனா இரண்டாம் தவணை ரூ 2000 க்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

கொரனோ நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் முதல் தவணையாக ரூபாய் 2000 ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இரண்டாவது தவணையாக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளின்போது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதியில் முதல்வர் ஒரு சிலருக்கு மட்டும் வழங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் வழங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையடுத்து இப்போது இரண்டாவது தவணைக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த வாரம் முதல் பணம் வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்
கட்சியில் காலியாகும் மாவட்ட செயலாளர்கள் கூடாரம்… அலறி அடித்து அறிக்கை விட்ட தேமுதிக தலைமை!