திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (20:33 IST)

இதை நிரூபித்தால்...நாட்டை விட்டு வெளியேறுகிறேன் - சத்குரு

சமீபத்தில் ஈஷா யோக மையம் என்ற அமைப்பினர் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கோயில்களை மீட்போம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளைச் சேர்ந்தோர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். அதேசமயம் திமுக அமைச்சர் அப்படிச் செயல்படுத்த முடியாது எனக் கூறினார்.

இந்நிலையில் இன்று ஜக்கி வாசுதேவுக்கு எதிரான டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வனத்தை ஆக்கிரமித்து கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தைக் கட்டியுள்ளதாக கூறி ஹேஸ்டேக் பதிவிட்டனர்.

தற்போது இதுகுறித்து ஜக்கி வாசுதேவ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வனத்துறைக்குச் சொந்தமான ஒரு இன்ஞ் நிலத்தை நான் ஆக்கிரம்பித்துள்ளதாக நிரூபித்தால் நாட்டை விட்டு வெளியேறத் தயார் எனக் கூறியுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.