செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (08:03 IST)

ஐ ஆர் எஸ் அதிகாரி பூ கொ சரவணன் மீது பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு!

சமூகவலைதளங்களில் பிரபலமாக இருந்த ஐஆர்எஸ் அதிகாரி பூ கொ சரவணன் மீது பெண்கள் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

சமூக ஆர்வலராகவும், அம்பேத்கரிய பெரியாரிய கருத்துகளை பரப்புபவராகவும் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர் பூ கொ சரவணன். இவர் இந்திய வருவாய் துறையில் உயர் பதவியில் இருக்கிறார். மிகச்சிறிய வயதில் யு பி எஸ் சி தேர்வுகளில் வெற்றி பெற்று அதிகாரவர்க்கத்துக்கு வந்துள்ள இவர் பல மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வந்தார்.

இதையடுத்து அவரை பின் தொடர்ந்த பல்வேறு மாணவிகள் மற்றும் பெண்களுக்கு ஆபாசமாக மெஸேஜ் அனுப்புதல் மற்றும் தனி மனித எல்லைகளை மீறுதல், பொது இடங்களில் அனுமதி இன்று தொட்டுப் பேசி அசௌகர்யமாக உணர வைத்தல் ஆகிய தொல்லைகளை கொடுத்ததாக பல பெண்கள் சமுகவலைதளங்களில் குற்றம் சாட்டியுள்ளனர். இது சம்மந்தமாக அவர் முன்னர் வேலை பார்த்த ஆனந்த விகடன் ஊடகமே செய்தி வெளியிட்டுள்ளதால் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை அதிகமாகியுள்ளது. இதையடுத்து பூ கொ சரவணன் பொது வெளியில் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.