1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today seven districts rain in tamil nadu

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம்

7 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் தினந்தோறும் மழை குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியபடியே தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து அறிவிப்பின்படி தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிகிறது. கோவை, நீலகிரி, தேனி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்பதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குஷி ஆகி உள்ளனர்
 
மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன என்பதும் இதனால் குடிநீர் பிரச்சனையை இந்த ஆண்டு இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது
 
அதேபோல் கடந்த சில மாதங்களாக வெயிலின் கொடுமையால் தவித்து வந்த பொதுமக்கள் தற்போது மழை பெய்து வருவதால் நிம்மதியைத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
அடுத்த கட்டுரையில்
இன்றுமுதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு: பேருந்து, கோயில்கள் மக்கள் கூட்டம்!