1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today rain chances in Tamilnadu districts

இன்று 23 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று 23 மாவடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதனால் தமிழகத்தின் நீர்நிலைகள் பல நிரம்பியுள்ளன.

மேலும் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய உள்ளதாக வான்லை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளிட்ட 23 மாவட்டங்களிலும், மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆகஸ்டு 28ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
About Writer
Prasanth Karthick