வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (13:38 IST)

திமுக மட்டும்தான் புத்திசாலியான கட்சின்னு நினைக்காதீங்க! – உச்சநீதிமன்றம் காட்டம்!

மாநில அரசுகள் இலவசம் தருவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் திமுக வழக்கறிஞரிடம் காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள் இலவசங்கள் தருவதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக சமீபத்தில் பிரதமர் மோடி பேசியதில் இருந்து இதுகுறித்த விவாதங்கள் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் நடத்தி வரும் வழக்கில் இன்று திமுக வழக்கறிஞர் வில்சன் தமிழக அரசு சார்பில் வாதாடினார்.

அப்போது பேசிய அவர் தமிழக அரசின் திட்டங்கள் இலவச திட்டங்கள் அல்ல என்றும் மக்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் எனவும் பேசினார்.

அதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா “கிராமப்புற மாணவர்களுக்கு சைக்கிள் தரப்படுவதால் அவர்கள் கல்வி கற்று பயனட்டைவர்.. அதுபோல பிற்படுத்தப்பட்ட கிராம மக்களின் முன்னேற்றத்திற்காக கால்நடைகள் வழங்கப்படுகின்றது.

இதுபோன்ற திட்டங்களை எல்லாம் கண்மூடித்தனமாக இலவசங்கள் என கூறவில்லை. திமுக மட்டும்தான் புத்திசாலியான, சாதுர்யமான கட்சி என நினைத்து பேச வேண்டாம். பல விவகாரங்கள் குறித்து பேசததால் அதுகுறித்து தெரியாமல் இருப்பதாக நினைக்க வேண்டாம்” என பேசியுள்ளார்.