1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Transport Unions ignore appraisal conversation

பத்தல.. பத்தல..! ஊதிய உயர்வு ஒப்பந்தம்! – தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு!

bus
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் சில தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு செய்துள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்த நிலையில் ஊதிய உயர்வு தொடர்பாக நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 7ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. இன்று இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி ஓட்டுனருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ.2,012, அதிகபட்சமாக ரூ.7,981 என்றும், நடத்துனருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ.1965, அதிகபட்சமாக ரூ.6,640 என்றும் முடிவாகி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் உடன்படாத சிஐடியூ மற்றும் ஏஐடியுசி ஆகிய தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
2022 -ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு!