தொடர்புடைய செய்திகள்
- ஆகஸ்ட் 23ம் தேதி வரை மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
- 3 வயது குழந்தைக்கு எலிக்காய்ச்சல் சிகிச்சைக்கு பதிலாக தவறான சிகிச்சை- எடப்பாடி பழனிசாமி
- உதான் திட்டம் படுதோல்வியா?- சி.ஏ.ஐ அறிக்கையில் வெளியான தகவல்
- தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும் - முன்னாள் முதல்வர் பசுவராஜ் பொம்மை
குடை ரெடியா? இன்று 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து வரும் நிலையில் இன்றும் 14 மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்த நிலையில் இன்றும் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய தகவலின்படி அடுத்த 3 மணி நேரத்திற்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Edit by Prasanth.K
