வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (18:57 IST)

உதான் திட்டம் படுதோல்வியா?- சி.ஏ.ஐ அறிக்கையில் வெளியான தகவல்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி  நடந்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியுள்ள  நிலையில், அடுத்தாண்டு வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் ஜெயிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

பாஜக ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்து செயல்படுத்தப்பட்ட  நிலையில், மத்திய பாஜக ஆட்சியின் மக்களுக்கான திட்டங்கள் பற்றி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பாத யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த  நிலையில்,உதான் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 93% வழிதடத்தில் விமான சேவையே தொடங்கவில்லை என சி.ஏ.ஐ அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.அதில், 1089 கோடி செலவில் பல வழித்தடங்களில் விமானமே இயக்கவில்லை எனவும், இத்திட்டத்தில், தமிழகத்தில் சேலம், ராம நாதபுரம், தஞ்சை, வேலூர் உள்ளதாக அரசு கூறிய நிலையில், சேலத்தில் மட்டுமே விமான சேவை இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.