1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today rain chances in Tamilnadu

தொடரும் கனமழை; 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கனமழை தொடர்ந்து வரும் நிலையில் இன்று 12 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழக மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களின் இன்று மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
நீலகிரியில் கனமழை; 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!