1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today rain chances in Tamilnadu

அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை வாய்ப்பு! – எந்தெந்த மாவட்டங்களில்?

Tamilnadu
தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதன்படி, அடுத்த சில மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பாஜக வேட்பாளருக்கு சிவசேனாவும் ஆதரவு: திரெளபதி முர்மு வெற்றி உறுதியா?