திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 ஜூலை 2022 (12:19 IST)

வயலில் தெரிந்த திருவள்ளுவர் உருவம்.. வைரலாகும் தமிழ் விவசாயியின் திறமை!

Thiruvalluvar
தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி ஒருவர் வயலில் நெற்கதிர்களில் திருவள்ளுவரின் உருவத்தை வரைந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் பண்பாடு, கலாச்சாரத்தில் முக்கியமானவையாக கருதப்படுபவை தமிழ் மொழியும், விவசாயமும். அதை போற்றும் வகையில் தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வயலில் திருவள்ளுவர் உருவத்தை வரைந்துள்ளார்.

தஞ்சாவூர் மயிலாம்பட்டியை சேர்ந்த விவசாயி இளங்கோவன் தனது வயலில் உள்ள நெற்கதிர்கள் இடையே மாற்று விதைகளையும் பயிரிட்டுள்ளார். உயரத்திலிருந்து பார்க்கும்போது வயலுக்கு நடுவே திருவள்ளுவரின் உருவம் தெரிகிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்கலில் வைரலாகியுள்ளது. பலரும் விவசாயி இளங்கோவுக்கு பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.