1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today rain chances in Tamilnadu

இன்றும் காத்திருக்கு செம மழை..! எந்தெந்த பகுதிகளில்?? – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி கன்னியாக்குமரி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் தமிழக பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகளிலும், வட தமிழக கடலோர பகுதிகளாக புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கலைஞர் இருந்திருந்தால் காலில் விழுந்திருப்பேன்! – சிவக்குமார் நெகிழ்ச்சி!