திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (23:46 IST)

ரஷ்யா டாங்கிகளை யுக்ரேனால் எப்படி அழிக்க முடிந்தது?

யுக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஆனாலும் இன்னும் போரில் வெற்றி பெறவில்லை. அதற்குள் நூற்றுக்கணக்கான டாங்கிகளை ரஷ்யா இழந்துவிட்டது. பலமான ரஷ்யா டாங்கிகளை யுக்ரேனால் எப்படி அழிக்க முடிந்தது?
 
பொருளாதார நெருக்கடிக்கு இயற்கை உரம் கட்டாயப்படுத்தப்பட்டதுதான் காரணமா? - பிபிசி தமிழின் கள ஆய்வு
 
''நான் தவறு செய்துவிட்டேன்'' என்று ஒப்புக்கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ; இலங்கை சந்தித்து வரும் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு இயற்கை உரம் கட்டாயப்படுத்தப்பட்டதுதான் காரணமா? - பிபிசி தமிழின் கள ஆய்வு
 
விசா இல்லாமல் தமிழகத்தில் சுற்றித் திரிந்த அமெரிக்க முதியவர்
 
விசா இல்லாமல் தமிழகத்தில் சுற்றித் திரிந்த அமெரிக்க முதியவரை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
 
நெல்லை மாவட்டம் உவரி சுற்றுலா தளமாகும். இங்கு சுமார் 60 வயதுடைய வெளிநாட்டு முதியவர் ஒருவர், கடந்த 2 தினங்களாக சுற்றித் திரிவதாக பொதுமக்கள் உவரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
 
இதனடிப்படையில், உவரி போலீசார் உவரி சோதனைச்சாவடியில் வைத்து அந்த வெளிநாட்டு முதியவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் பெயர் வெரிட் என்ற ஸ்பெக்சட் என்பதும் அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
 
அமெரிக்க முதியவர் இவர் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி சுற்றுலா விசாவில் டெல்லிக்கு வந்து பின் மும்பை வழியாக ஒவ்வொரு இடமாக சுற்றி பா ர்த்து விட்டு தமிழகம் வந்திருக்கிறார். தனது விசா காலம் மார்ச் 31ம் தேதி முடிவடைந்த நிலையில், அவர் தொடர்ந்து இன்று வரை ஒவ்வொரு சுற்றுலா தலமாக சுற்றி திரிந்தது தெரிய வந்தது.
 
இந்நிலையில் உவரி போலீசார் அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு முதியவரை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.