1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today rain chances in Tamilnadu

வெளுத்து வாங்கும் மழை.. இன்னும் வலுக்கும்! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ காற்றால் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மழைப்பொழிவு மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்துள்ளது. டெல்டா பகுதிகளான நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர் பகுதிகளில் அதிகாலை முதலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களின் பல பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, குன்னூர் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
84 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இந்திய கொரோனா நிலவரம்!