செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 6 நவம்பர் 2020 (08:19 IST)

வேல் யாத்திரைன்னு வந்தா கைது பண்ணுங்க! – திருத்தணியில் போலீஸார் குவிப்பு

தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திருத்தணியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பாஜக சார்பில் இன்று திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் அபாயம் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும், மீறி யாத்திரை நடத்த முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அரசின் உத்தரவை மீறி திருத்தணியில் பாஜகவினர் கூட வாய்ப்புள்ளதால் கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருத்தணி முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரவை மீறி யாத்திரை நடத்த முயல்பவர்களை கைது செய்ய 20க்கும் மேற்பட்ட பேருந்துகளையும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது