வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (15:18 IST)

இன்று முடிவடைந்தது பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி எப்போது?

கடந்த சில நாட்களாக பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இன்றுடன் பிளஸ்டூ பொது தேர்வுகள் முடிவடைந்துள்ளது
 
தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த பிளஸ் டூ தேர்வு எழுதி உள்ளனர் என்பதும் இந்த தேர்வு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து மாணவ மாணவிகள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிளஸ் டூ பொது தேர்வு இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் பத்தாம் தேதி தொடங்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 
 
பிளஸ் டூ பொது தேர்வு முடிவுகள் அநேகமாக அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வில் தமிழ் உள்பட ஒரு சில மொழிப் பாடங்களை ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதாமல் இருந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது என தமிழக அரசு தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran