தொடர்புடைய செய்திகள்
- உங்களோடு தேசம் துணை நிற்கிறது!" - ஜி.வி .பிரகாஷ்குமார் , கமல் டுவீட்
- வேலூரில் மேலும் ஒரு மாதம் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!
- தவணை முறையிலாவது பள்ளி கட்டணம் வசூலிக்கலாமா? – அரசிடம் கோரும் தனியார் பள்ளிகள்!
- லத்தியில், மேசையில் ரத்தக்கறை; தப்பி ஓடிய காவலர் – அதிர்ச்சியளிக்கும் மாஜிஸ்திரேட் அறிக்கை!
- மாணவனை தாக்கிய போலீஸ்; களமிறங்கிய மனித உரிமை ஆணையம்!
மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை! – இன்றைய நிலவரம்!
கடந்த சில நாட்களாய் எதிர்பாராத அளவிற்கு வேகமாக விலை உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் இன்று மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது.
தமிழகத்தில் கோரோனா பாதிப்பினால் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோலுக்கான வரி 28லிருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி 20லிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. இந்நிலையில் நேற்று முன் தினம் முந்தைய நாட்களை விட விலையேற்றம் குறைவான அளவில் இருந்தது. அன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 4 பைசா உயர்ந்து ரூ.83.63க்கும், டீசல் லிட்டருக்கு 11 பைசா உயர்ந்து ரூ.77.72க்கும் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்றும் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது.
