இன்று இரவு மழை கொட்டப்போகும் மாவட்டங்கள்: வானிலை அறிவிப்பு!
இன்று இரவு இரண்டு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது
இந்த நிலையில் இன்று காலை வெளியான வானிலை அறிவிப்பு இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் இன்று இரவு கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அந்த அறிவிப்பை அடுத்து கன்னியாகுமரி நெல்லை மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
Edited by Mahendran