1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2023 (07:53 IST)

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு.. கொடியசைத்து தொடங்கி வைத்த உதயநிதி!

alanganallur
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன் கொடியை துவக்கி வைத்தார்.
 
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். மதுரை அவனியாபுரம், திருச்சி சூரியூர், மதுரை பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏராளமான காளையர்கள் கலந்து கொண்டனர். 
 
இந்த நிலையில் இன்று உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் வந்துள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்புடன் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சற்று முன் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்படும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva