1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 16 ஜனவரி 2023 (14:36 IST)

பாலமேடு ஜல்லிக்கட்டு: 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழப்பு

jallikattu
பாலமேடு ஜல்லிக்கட்டு: 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழப்பு
உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் ஒன்பது காளைகளை அடக்கிய காளையர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்த நிலையில் பல இளைஞர்கள் காளைகளை அடக்கி பரிசுகளை பெற்று வந்தனர். அந்த வகையில் ஒன்பது காளைகளை அடக்கிய மாடுபிடு வீரர் அரவிந்தராஜன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார் 
 
அவர் காளையை அடக்கும்போது காளை கொம்பால் முட்டிய போது படுகாயம் அடைந்தார். அதன் பின்னர் அவர் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டது. 
 
9 காளைகளை அடக்கிய வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva