திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (14:54 IST)

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘காளைகள்’: தெறித்து ஓடிய காளையர்கள்

vijayabashkar
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் இன்று ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட நிலையில் அந்த காளையை பார்த்து மாடுபிடி வீரர்கள் தெறித்து ஓடிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
 
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் தனது வீட்டில் இரண்டு காளைகளை வளர்த்து வருகிறார். இந்த காளைகள் ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் கலந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் இன்று நடந்த ஜல்லிக்கட்டிலும் இந்த இரண்டு காளைகள் கலந்து கொண்ட நிலையில் இந்த இரண்டு காளைகளை யாராலும் அடக்க முடியவில்லை. 
 
காளைகளை பார்த்ததும் காளையை அடக்க வந்த வீரர்கள் தெறித்து ஓடிய சம்பவங்களின் வீடியோக்கள் இணையதளங்களில் இருந்தது. தனது காளை கம்பீரமாக வாடிவாசலில் இருந்து வெளியேறிவதை அமைச்சர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
 
Edited by Mahendran