1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Gold price in Chennai

தீபாவளிக்கு பின் விலை உயரும் தங்கம்! இன்றைய விலை நிலவரம்!

Tamilnadu
கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த தங்கம் தீபாவளிக்கு பிறகு அதிரடியாக விலை உயர தொடங்கியுள்ளது.
 

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது மீண்டும் ஏறுமுகத்தில் விற்பனை ஆகி வருகிறது.  

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ரூ.38,568க்கு விற்பனை ஆகிறது. அதேபோல ஒரு கிராம் ரூ.38 உயர்ந்து ரூ.4,821-க்கு விற்பனை ஆகிறது. 
அடுத்த கட்டுரையில்
பாஜகவுக்கு ஆதரவா? தனிக்கட்சியா? – அழகிரியின் சூறாவளி சுற்றுப்பயணம்?