1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today also petrol and diesel rate hiked

தொடர்ச்சியாக 3வது நாளாக உயரும் பெட்ரோல் டீசல் விலை: இன்றைய விலை என்ன?

பெட்ரோல்
5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவடைந்ததை அடுத்து கடந்த 3 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது 
 
நேற்று முன்தினம், நேற்று ஆகிய இரண்டு நாட்களிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இன்றைய விலை உயர்வு சற்று அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 20 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.90 ரூபாய்க்கும், டீசல் விலை 26 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தப்படுவதாக கூறப்பட்டாலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபோது அதிகப்படுத்திய பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த வேண்டுகோளை மத்திய மாநில அரசுகள் ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்… ஸ்டாலினுக்கு கமல் கோரிக்கை!