தொடர்புடைய செய்திகள்
- மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு..!
- ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்.. முழு விபரங்கள்..!
- ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அரசுக்கு கேள்வி எழுப்பிய டாக்டர் ராமதாஸ்..!
- நீட் குறித்து ஆளுநரிடம் கேள்வி எழுப்பியவர்: மத்திய அரசு பணியில் இருந்து நீக்க கோரி மனு..!
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: விடுபட்டவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை.. ஆளுநர் நிறுத்திவைப்பு..!
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்த நிலையில் அதனை ஆளுனர் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி மற்றும் 10 உறுப்பினர் பதவிகளுக்கும் பரிந்துரை பட்டியலை தமிழக அரசு ஆளுனருக்கு அனுப்பியது. ஆனால் தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக ஆளுநர் நிறுத்திவைத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதில் அளித்த பிறகும் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Edited by Mahendran
