செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (15:13 IST)

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. எந்த இணையதளம்?

Group 4
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் தேர்வர்கள் தங்களது முடிவை பார்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன,
 
கிராம நிர்வாக அலுவலர் உட்பட காலியாக உள்ள 6000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் மாதம் தேர்வு நடைபெற்றது.
 
இந்த தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதிய நிலையில் தேர்வு நடந்த 4 மாதங்களுக்கு பின்னும் தேர்வு முடிவு வெளியாராமல் இருந்த நிலையில் சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியிட்டப்பட்டுள்ளன.
 
தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in, tnpscexams.in 
ஆகிய இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது . இதனை அடுத்து தேர்வு எழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர்.
 
இன்று காலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணத்தின் கூட்டம் நடைபெற்ற நிலையில் மதியமே குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran