1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TNPSC group 2 and 2A exam result

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது? புதிய தகவல்..!

tnpsc
சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. குரூப் 2 மற்றும் குரூப் 2A பணிகள் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், இந்த மாதம் தேர்வு நடைபெற்றது.

 இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தில் தேர்வு எழுதியவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள் அநேகமாக டிசம்பர் மாதத்தில் வெளியாகும் வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதன்மை தேர்வுகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு இந்த முறை எழுதியவர்களுக்கு விரைவில் முடிவுகள் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பம்: செந்தில் பாலாஜி விடுதலையாவதில் சிக்கலா ?