1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஜூலை 2024 (08:09 IST)

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு.. 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும்..!

tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு இன்று நடைபெற உள்ளதை அடுத்து தேர்வு மையத்திற்கு தேர்வு எழுதுபவர்கள் 9 மணிக்குள் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகிறது என்பதும் மாநிலம் முழுவதும் 797 மையங்களில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
2 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்று இந்த தேர்வை எழுத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வருகை தர வேண்டும் என்றும் அதற்கு பின் தாமதமாக வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வருவதற்கு வசதியாக பேருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran