திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2024 (19:24 IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியீடு.. எந்த இணையத்தில் பார்க்கலாம்?

கடந்த சில நாட்களுக்கு முன்னாடி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது இந்த தேர்வின் ஆன்சர் கீ வெளிவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்சர் கீ மூலம் தேர்வர்கள் தாங்கள் எத்தனை கேள்விகளுக்கு சரியான விடை எழுதி இருக்கிறோம் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடந்த சிலையில் இந்த தேர்வை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.  சென்னையில் மட்டும் 432 மையங்களில் தேர்வு நடந்தது என்பதும் சுமார் 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி, குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ என்று கூறப்படும் விடைக் குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. https://tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=e3561976-cea2-4f11-bda8-0911fce6b16e என்ற இணையதளத்தில் ஆன்சர் கீ உள்ளதாகவும், இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் ஜூன் 25ஆம் தேதி வரை ஆன்லைனில் தஙக்ள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva