குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததா? டி.என்.பி.எஸ்.சி விளக்கம்!
சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் குரூப் 4 தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என தமிழ்நாடு அரசு தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கான பயிற்சி வழங்குவதில் குறிப்பிட்ட சில பகுதி என்பது முன்னணிகள் இருக்கும். அதுபோன்று ஸ்டேனோ டைப்பிங் பயிற்சி பொருத்தவரை காஞ்சிபுரம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் கடந்த காலங்களில் அதிகமான தேர்வர்கள் தேர்வாகியுள்ளனர்
சங்கரன்கோயில் பகுதியில் அமைக்கப்பட்ட மையங்களில் இருந்து 450 பேர் தேர்வு எழுதினர். ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதி அவர்கள் அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் பரவி உள்ளது. ஆனால் அவ்வாறு முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு அரசு தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது
Edited by Mahendran