ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 27 மார்ச் 2023 (16:03 IST)

பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பு வீண்: ஒரே பயிற்சி மையத்திலிருந்து குறித்து அண்ணாமலை

ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்ற விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பு வீண் என்று கூறியுள்ளார். 
 
தென்காசியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் படித்த மாணவர்கள் 2000 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சட்டசபையில் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பதாவது:
 
தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது. 
 
அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும். உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
 
Edited by Siva