டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஒரே மையத்தில் 615 பேர் தேர்ச்சி: விளக்கம் கேட்கப்படும் என பிடிஆர் தகவல்..!
ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் இது குறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும் என சட்டசபையில் இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறிய நிதியமைச்சர், மனித வள மேலாண்மை துறை செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
காரைக்குடியில் ஒரே மையத்தில் நில அளவர் தேர்வில் தேர்ச்சி பெற்ற விபரங்கள் கிடைத்துள்ளது என்றும் தேர்ச்சி பட்டியலில் முதல் 2000 இடங்களில் உள்ள 615 பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர் என்பது உறுதி செய்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முறைகேடு புகார் பிரித்து விரிவான விளக்கம் அளிக்க டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலாளருக்கு உத்தரவிட்டு உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்/நில அளவர் தேர்வு முறைகேடு கவனயீர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் பிடிஆர் அவர்கள் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
Edited by Mahendran