TNPSC தேர்வு முடிவுகள் எப்போது? வெளியானது புதிய அட்டவணை!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி இதுவரை வெளியாகாத தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, குரூப் 2, 2ஏ பிரிவில் 5,446 காலிப் பணியிடங்களுக்காக நடந்த முதன்மை தேர்வின் முடிவுகள் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.
குரூப் 4 பிரிவில் 7,301 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும்.
குரூப் 1 பிரிவில் 95 காலி பணியிடங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல்நிலைத்தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவைத் துறையின் கீழ் உதவி மருத்துவர் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் மே மாதம் வெளியாகும் என்றும், புள்ளியியல் சேவைத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு சுகாதார சேவௌத்துறை, வனப்பயிற்சியாளர் உள்ளிட்ட பல அரசு வேலைகளுக்காக நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K