செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2023 (15:11 IST)

பிப்.25ல் நடைபெற்ற குரூப்-2, 2ஏ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; ஈபிஎஸ் கோரிக்கை!

Edappadi
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு கடந்த 25ஆம் தேதி நடந்த நிலையில் இந்த தேர்வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தன. மாநிலம் முழுவதும் 186 தேர்வு மையங்களில் பிப்ரவரி 25ஆம் தேதி நடந்த குரூப் 2 முதல் நிலை தேர்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டதாகவும் குளறுபடி சரி செய்யப்பட்டு மீண்டும் காலதாமதமாக தேர்வு நடந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் ஒரு சில மையங்களில் தேர்வர்கள் வினாத்தாளில் உள்ள கேள்விகளை பார்த்து அதற்கான விடைகளை தங்கள் செல்போன் மற்றும் புத்தகங்களை பார்த்து எழுதியதாகவும் கூறப்பட்டது. இந்த குளறுபடிகளை கண்டித்து அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் உள்பட பலர் அறிக்கை வெளியிட்டதோடு, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினர். 
 
இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் வினாத்தாள் குளறுபடியால் தகுதி வாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து இந்த தேர்வு ரத்து செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran