வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (13:12 IST)

TNPSC, SSC.. தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்! – விண்ணப்பிப்பது எப்படி?

Coaching
தமிழ்நாட்டில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டு இளைஞர்கள் பலர் ஆண்டுதோறும் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட பல அரசு பணிக்கான தேர்வுகளை எழுதி வருகின்றனர். லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற செய்ய பல கட்டண பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொருளாதார வசதியற்ற மாணவர்களும் இந்த தேர்வுகளுக்கு பயிற்சி பெற உதவும் விதமாக தமிழக அரசு இலவச பயிற்சி வகுப்புகளை அவ்வபோது நடத்தி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் TNPSC, SSC, IBPS, RRB ஆகிய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை www.civilservicecoaching.com என்ற தளத்தில் கட்டணமின்றி விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த மாணவர்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரி மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் கலைக் கல்லூரிகளில் நடைபெறும். ஏப்ரல் 10ம் தேதி முதல் தொடங்கி 6 மாதங்களுக்கு இந்த வகுப்புகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.