வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (16:17 IST)

ஹேஷ்டேக் எதிரொலி: குரூப்-4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!

TNPSC
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது என்பதை குறித்த ஹேஷ்டேக் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் டிரெண்டான நிலையில் சற்று முன் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தேர்வு முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்புகளில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு 4 அடங்கிய பணிகளுக்கான தேர்வினை 24/7/2022 அன்று நடத்தியது
 
இந்த தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையதால் 14/ 2/ 2003 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்தி குறிப்பின்படி தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது
 
மேலும் இத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிகள் வெளியிடப்படும் என்று மீண்டும் தேர்வர்களின் கனிவான தகவலுக்காக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran