1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TNPSC Exam Updates: Announcements and New Procedures

குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்..!

tnpsc
டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழக அரசின் காலியான இடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில் குரூப்-1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உட்பட ஏழு போட்டி தேர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குரூப்-1, குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆண்டு தேர்வு கால அட்டவணையின் படி, அனைத்து தேர்வுகளுக்கும் குறிப்பிட்ட தேதிகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வுகள் முறையான முறையில் நடத்தப்பட்டு, முடிவுகள் விரைவாக வெளியிடப்படும்.

அந்தவகையில், குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி வெளியாகும். அரசு துறைகளிடமிருந்து காலியிடங்களின் விபரம் மார்ச் மாத இறுதிக்குள் கிடைக்கும். இதன் அடிப்படையில், தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடும்போது, காலியிடங்களின் முழு விபரமும் அதில் குறிப்பிடப்படும்.

தேர்வர்கள் சிறிதும் குழப்பமில்லாமல் விடைத்தாள் நிரப்பும் வகையில், புதிய எளிமையான நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் அனைத்து தேர்வுகளிலும் இந்த முறையே பின்பற்றப்படும். இதன் மூலம், விடைத்தாள் பூர்த்தி செய்யும் பணியில் எளிமை ஏற்படும்.

மேலும், தேர்வு முடிவுகள் விரைவாகவும் தவறின்றி வெளியிடப்பட வேண்டும் என்பதில் டிஎன்பிஎஸ்சி உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மகனுக்கு சீட் கேட்ட செங்கோட்டையன்.. மறுத்த எடப்பாடி?? - மோதலுக்கு இதுதான் காரணமா?