1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN small parties supports DMK

எத்தனை தொகுதி கொடுத்தாலும் ஓகே! – திமுகவிடம் வேல்முருகன் டீல்!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் திமுகவிற்கு ஆதரவளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸ் திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில் தமிமுன் அன்சாரியும் ஆதரவு அளித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். திமுக எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பலர் திமுக ஆதரவு நிலைபாடு அளித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பெரியார் சிலையில் எரியும் டயரை வீசியவர் கைது – கிருஷ்ணகிரியில் பரபரப்பு!