1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN police action against drungs

5 கிராம் குட்கா வைத்திருந்தால் கூட நடவடிக்கை.. சென்னை காவல்துறை தீவிரம்

போதை
போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்த சென்னை காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கையில் 5 கிராம் குட்கா வைத்திருந்தால் கூட நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு  பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும்  , குட்கா வாங்கிய இடம் வரை கூண்டோடு சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கஞ்சாவை தொடர்ந்து குட்கா, பான் மசாலா, கூல் லிப் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் விற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்த போலீசாருக்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும்  செய்தி வெளியாகியுள்ளது.

 போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தமிழக போலீசார் எடுத்து வரும் இந்த நடவடிக்கைக்கு தமிழக மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது.. சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு கண்டனம்..!