1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2023 (20:09 IST)

திமுகவின் 'முரசொலி' பத்திரிக்கை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கம்

murasoli
தமிழக முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியால் கடந்த 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்கப்பட்ட நாளிதழ் முரசொலி.

இந்த இதழில் கருணாநிதி தினமும் தொண்டர்களுக்கு  உடன்பிறப்பே என்று கடிதம் எழுதி வந்தார்.

அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மறைந்த நிலையில், திமுகவினரின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் அக்கட்சியின் தலைவரும்  முதல்வருமான  மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார்.

இந்த நிலையில் முரசொலி நாளிதழின் பேஸ்புக் பக்கம் இரு தினங்களுக்கு முன்பு ஹேக்கர்களால் முடக்கப்பட்ட  நிலையில், முற்றிலுமாக பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

இந்த முடக்கம் பற்றி மத்திய சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.