1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:01 IST)

தயார் நிலையில் தனியார்... அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?

1 முதல் 8 வரையிலான வகுப்புகள் திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் பற்றி அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். 
 
கொரோனா 2வது அலை மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  அதன்படி தமிழகத்தில் 9 - 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு அரசு பிறப்பித்த நெறிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது. 
 
இதனிடையே அடுத்து  1 முதல் 8 வரையிலான வகுப்புகள் திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் பற்றி அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். இதன்பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்த முடிவை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
மேலும், 1 முதல் 8 வரையிலான வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த தனியார் பள்ளிகள் தயாராக உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.