திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (08:24 IST)

16வது மாதமாக கிரிவலத்திற்கு தடை! – பக்தர்கள் சோகம்!

திருவண்ணாமலையில் கொரோனா காரணமாக இந்த மாதமும் கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சபூத தலங்களில் அக்கினி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கிரிவலம் நடத்தப்படுவதும், அதில் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் கலந்து கொள்வதும் வழக்கம்.

ஆனால் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாக திருவண்ணாமலையில் கிரிவலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பல்வேறு கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும், கிரிவலத்தில் மக்கள் பங்கேற்க தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தொடர்ந்து 16வது மாதமாக கிரிவலத்தில் பங்கேற்க முடியாதது பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.