செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (08:30 IST)

ஊரக உள்ளாட்சி தேர்தல்; முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட திமுக!

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரு கட்டமாக நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் பலவும் தீவிர தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை முதற்கட்டமாக திமுக வெளியிட்டுள்ளது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.