1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2023 (14:22 IST)

’வாரிசு’ துணிவு’ படங்களுக்கு அதிகாலை காட்சி ரத்து: தமிழக அரசு உத்தரவு

theater
அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாளை வெளியாக உள்ளன. துணிவு திரைப்படம் அதிகாலை ஒரு மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 5 மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சற்று முன் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் ஜனவரி 13 முதல் 16 வரை சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது 
 
அது மட்டுமின்றி திரையரங்குகளில் உயரமான பேனர்கள் வைக்க தடை என்றும் பாலாபிஷேகம் செய்ய தடை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13 முதல் 16 வரை சிறப்பு காட்சிகளுக்கு தடை என்றாலும் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்புக் காட்சிகளுக்கு தடை இல்லை என்பது இந்த உத்தரவின் மூலம் தெரியவந்துள்ளது

 
Edited by Mahendran