1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 ஜனவரி 2023 (09:55 IST)

தமிழக அரசின் 'நலம் 365' யூ-டியூப் சேனல் இன்று தொடக்கம்!

youtube
தமிழக அரசின் நலம் 365 என்ற யூடியூப் சேனல் இன்று முதல் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பாக டிஜிட்டல் முறையில் பல அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் தமிழ்நாடு சுகாதாரத் துறையின் திட்டங்கள், தடுப்பூசி, விழிப்புணர்வு உள்ளிட்ட அரசின் சேவைகள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக யூடியூப் சேனல் ஒன்று தமிழக அரசின் சார்பாக தொடங்கப்பட உள்ளது. 
 
நலம் 365 என்ற யூடியூப் சேனல் இன்று தொடங்கி வைக்கப்படுவதாகவும் இந்த யூடியூப் சேனலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இந்த சேனலில் சுகாதாரத் துறையின் அனைத்து திட்டங்களும் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva