திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (19:49 IST)

சென்னையில் இரண்டு புதிய பாலங்கள்: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

bridges
சென்னையில் போக்குவரத்து வசதிக்காக ஏற்கனவே பல பாலங்கள் கட்டப் பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு பாலங்கள் கட்டப் பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வளசரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே 74.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
சின்ன நொளம்பூர் என்ற பகுதியில் ரூபாய் 42.71 கோடி மதிப்பில் ஒரு பாலமும், சன்னதி 1வது குறுக்குத் தெருவில் 31.65 கோடி மதிப்பில் ஒரு பாலம் என மொத்தம் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வளசரவாக்கம் பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran