1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஜூலை 2020 (17:30 IST)

மருந்தகங்களில் பாராசிட்டமால் விற்க தடையா? தமிழக அரசு விளக்கம்

paracetomol
பாராசிட்டமால் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யக் கூடாது என்றும் அவ்வாறு விற்பனை செய்தால் அபராதம் விதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்தகங்களுக்கு வாய்மொழியாக அரசு எச்சரித்து உள்ளதாக ஒரு செய்தி வெளியானது.
 
இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்த நிலையில் பாராசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்றி வழங்கக் கூடாது என உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர் 
 
முன்னதாக பாராசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் தடையின்றி வழங்க வேண்டும் என்றும் எவ்விதமான கட்டுப்பாடுமின்றி பாராசிட்டமால் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கின் மனுதாரர் கோரியிருந்தார்
 
ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு சிலர் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பாக வெளி நாட்டில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வருபவர்கள் தங்களுடைய உடல் வெப்பநிலையை குறைத்து காட்டுவதற்காக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது