செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 19 மே 2020 (16:35 IST)

ஹைட்ரோக்ஸோகுளோரோக்யின் மாத்திரையை தினமும் எடுத்துக் கொள்ளும் ட்ரம்ப்! மருத்துவர்களின் எச்சரிக்கை மீறல்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹைட்ரோக்ஸோ குளோரோக்யின் மாத்திரையைத் தினமும் எடுத்துக் கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மேல் உள்ளது. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை எட்ட உள்ளது. இந்நிலையில் ஹைராக்ஸிக்ளோரொகுயின் என்ற மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்த இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா பெற்றது.

ஆனால் அந்த மருந்தைப் பயன்படுத்தினால் இதய துடிப்பு அதிகமாதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் அதைப் பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதை ட்ர்மப் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தினமும் ஹைட்ரோக்ஸோகுளோரோக்யின் மாத்திரை ஒன்றை தான் உண்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ‘எத்தனை பேர் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள், முதல் வரிசை ஊழியர்கள் அனைவரும் இதை சாப்பிடுகிறார்கள். நானும் இந்த மருந்தை கடந்த இரண்டு வாரங்களாக எடுத்துக்கொள்கிறேன். அந்த மாத்திரையை பற்றி தெரிந்துகொண்டுதான் அதை எடுத்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.