செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 மார்ச் 2020 (13:19 IST)

Hydroxychloroquine மாத்திரைகள் ஏற்றுமதிக்கு தடை!

Hydroxychloroquine மாத்திரைகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 
மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனா சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசர காலக்குழு பரிந்துரைத்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பரிந்துரைத்தது மத்திய அரசு. 
 
இந்த மருந்தை இந்தியா தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. ஒப்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை தடை செய்துள்ளது. 
 
ஹைட்ராக்ஸிகுளோரோகின் மற்றுமின்றி இதனை தயாரிக்க பயன்படும் அம்ற்ற மருந்துகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறியிருந்த மாத்திரை அளவு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும் என்றும் புதிய ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.