1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn govt kept arun ips and kannan to waiting list

அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!.. வீரமணி விவகாரமா?...

arun ips
கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தவர் அருண் ஐபிஎஸ். இவர் மீது பல புகார்களை பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் கூறினார். இதையடுத்து, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சவுக்கு சங்கர் மட்டுமல்ல.. பல பேர் மீதும் அருண் ஐ.பி.எஸ் குண்டர் சட்டத்தை உபயோகித்து சிறையில் அடைத்தார். ஆனால் ஆட்சி மாறியதும் அருண் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் போலீஸ் அகாடமி இயக்குனராக அருண் நியமிக்கப்பட்டார்.

தற்போது ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் 2024 ஆம் வருடம் வீரமணி பற்றி புகார் அளித்த கோவை மாநகர ஆணையர் கண்ணனையும் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

கோவை மாநகர ஆணையர் கண்ணன் 2024ம் வருடம் சென்னையில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வீரமணி வழக்கு!.. எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை!.. ஜான் பாண்டியன் மறுப்பு..